- உங்கள் வாயில் ஒரு நாளுக்கு சுமார் ஒரு லிட்டர் அளவு எச்சில்
சுரக்கிறது.
- சில வேளைகளில் நீங்கள் விழித்திருக்கும் நேரத்தை விட தூங்கும் நேர்த்தில் உங்கள்
முளை அதிகமாக வேலை செய்கிறது.
- நமது உடலிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அளவு சிறிய ஒளி வெளிப்படுகிறது. இதை நாம்
பார்க்கும் சக்தி கண்ணுக்குக் கிடையாது.
- ஒரு சராசரி மனிதரின் தொப்புளில் 67 விதமான பேக்டீரியாக்கள்
இருக்கின்றன.
- குழந்தைகள் பிறந்த ஒரு மாதம் வரை அழும்போது கூட கண்ணீர்
சிந்தாது.
- நுரையீரலின் இடது பகுதி வலது பகுதியை விட சுமார் 10 சதவிகிதம்
சிறியது.
- மனிதப் பற்கள் ஒரு ஷார்க் மீன் பற்கள் அளவு
வலுவானது.
- மனித மூக்கு சுமார் 1 ட்ரில்லியன் (அதாவது ஒரு லட்சம் கோடி) வகையான வாசனைகளை அறிய
வல்லது.
- மனிதன் மட்டுமே நாண உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு
இனம்.
- உயரம்: காலை எழுந்தவுடன் உங்கள் உயரம் மாலையை விட சுமார் 1 செ. மீ அதிகமாக
இருப்பதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விழித்திருக்கும் வேளைகளில் நாம் பல வேலைகளில், செயல்களில் ஈடுபட்டிருப்பதால் நம் முதுகெலும்பின் குருத்தெலும்பு சுருங்குவதாலும் இரவில் படுக்கப்போன பின் அது
மீண்டும் சம நிலைக்கு வந்து விடுவதாலும் இப்படி நிகழ்கிறது.
- இரும்பு சத்து: சராசரியாக ஒரு ஆணின் உடம்பில் 4 கிராம் அளவும், ஒரு பெண்ணின்
உடலில் 3.5 கிராம் அளவும் இரும்பு சத்து உடல் முழுவதும் வினியோகப்பட்ட்டிருக்கிறது. இந்த அளவில் ஒன்றிரண்டு இன்ச் நீள ஆணியை உற்பத்தி செய்து விடலாம்.
- தசைகள்: ஒரு சிறு அடி எடுத்து வைக்க சுமார் 200 விதமான தசைகள் இணைந்து வேலை
செய்கின்றன.
- தாயின் கருவறை (Womb): ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறு மாதத்துக்குப் பிறகு வெளி உலகின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கக்கூடும். அதனால் பிறந்த பிறகு தாயின் குரலை அதனால் அடையாளம் கண்டுகொள்ள
முடியும். அதனுடைய உணவைப் பற்றிய தேர்வுகளும், ருசிகளும் தாயின் கருவறையில் தொடங்குகின்றன. அவை பொதுவாகத் தாயின் விருப்பங்களையொட்டியே இருக்கும்.
- வாய்: சராசரியாக ஒருவரின் வாயில் 600 கோடி பேக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது.
இவற்றில் சில நல்ல பேக்டீரியாக்கள். வாயை நலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. மற்றவை வியாதியை உண்டாக்குபவை.