சான்றோர்கள் பலரின் கருத்துக்களைக் காதால் கேட்டும், படித்தும், பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறைப் பற்றித் தெரிந்தும், அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்தும், சொந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டும், திரட்டிய பல கருத்துக்களின் தொகுப்புதான் “பெர்சனாலிடியை வளர்த்துக் கொள்வது எப்படி?” என்ற இந்தப் புத்தகம்.
வெளியீடு: ஆகஸ்ட், 2020
"Appearances make the impressions but it is the personality that makes the impact."
இன்று நாம் இருப்பது வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்ற, போட்டி நிறைந்த ஒரு உலகம். வாழ்க்கையில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எல்லோருமே துடித்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் எல்லோரையும் குடைந்து கொண்டிருக்கிறது. சரியான விடை தெரியாமல் நம்மில் பலரும் பல விதமாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்.
படிப்பில் நிறைய மதிப்பெண்கள், கடினமான உழைப்பு, நல்ல திறமை, அறிவு, செல்வம் இவை மட்டும் இருந்தால் வெற்றியடையப் போதாது என்பதே இன்றைய உலகில் உண்மையான நிலை.
அறிவும் திறமையும் உழைப்பும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கும் ஒரு படி மேலாகவும் நம்முடைய ஆளுமையை (PERSONALITY) வளர்த்துக் கொள்வது வெற்றிக்கு மிகவும் உதவும் என்பதைக் காட்டுவதும் நம் ஆளுமையை (PERSONALITY). எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைச் சொல்வதும் தான் இந்த நூலின் நோக்கம்.
இனி வரும் பகுதிகளில் ஆளுமையைப் பற்றிச் சொல்வதற்கு ஆங்கில வார்த்தையான “பெர்சனாலிடி” என்பதையே எழுதப் போகிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெர்சனாலிடியை வளர்த்துக்கொள்வது பற்றி வகுப்புகளை நான் நடத்தி வந்திருக்கிறேன். பல மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், முதல்வர்களுடனும், மற்றும் சில பெற்றோர்களுடனும் கலந்துரையாடியிருக்கிறேன்.
என் அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டதைப் பற்றியும், நான் படித்துக் தெரிந்து கொண்டதைப் பற்றியும், பல கருத்துக்களை நானே கடைபிடித்துத் தெரிந்து கொண்டதைப் பற்றியும் சில ஆண்டுகளுக்கு முன்பு “மாணவர் உலகம்” என்ற மாதப் பத்திரிகையில் ஒரு தொடராக எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரைகளை தொகுத்து, திருத்தி சீரமைத்து இப்பொழுது ஒரு நூலாக வடித்து முடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு மாணவ மாணவிக்கும், இளைஞருக்கும், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற என்னுடைய பிரார்த்தனைகள். வாழ்த்துக்கள்.
… தொடரும்
பின் குறிப்பு: நடைமுறை யதார்த்தத்துக்காக இந்த நூலில் பல இடங்களில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன். பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை சரியான புரிதலுக்காக அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். இந்த ஆங்கில வார்த்தைகள் பொதுவாக நமக்கு அறிமுகமானவைதான். தினப்படிப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருபவைதான். அதையும் மீறி, ஒரு சில வார்த்தைகளுக்கு அந்தந்த மொழியில் ஒரு தனி வலிமை இருக்கும். அதை அப்படியே பயன்படுத்தினால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மேலும், ஒரு சில கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்காகத் தேவைக்கேற்ப பல இடங்களில் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் எழுதியிருப்பேன்.
“The Youth of today are the Leaders of tomorrow.” - Nelson Mandela
இன்றைக்கு, பெரும்பாலான, படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு, அவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப நல்ல வேலை கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் இருப்பது நிதர்சனமான உண்மை. நிறைய பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிப்பு முடித்த மாணவர்கள், அல்லது இரண்டு ஆண்டுகள் மேலாண்மை (Management) படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் கூட வேலைக்காக அலைவதைப் பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. போதிய ஊக்குவித்தலும், பயிற்சியும், நிதி வசதியும் இல்லாததால் சுயமாகத் தொழில் செய்யும் வாய்ப்பும் பலருக்குக் கிடைப்பதில்லை.
சரியான வேலை இல்லாமல் வாழ்க்கையையே ஒரு தோல்வியாக பலர் நினைப்பதற்கு காரணங்கள் பல உண்டென்றாலும், படிக்கின்ற மாணவ பருவத்தில், வளர்கின்ற இளமைப் பருவத்தில் தன்னை வளர்த்துக் கொள்வது பற்றிய ஒருவரின் மெத்தனப்போக்கு (Lack of Awareness about Self Improvement) இந்த தோல்வி மனப்பான்மைக்கு ஒரு மிக, மிக முக்கியமான காரணமாகும்.
இன்றைய காலக் கட்டத்தில் இந்தியாதான் உலகிலேயே மிக இளமையான நாடாகக் கருதப்படுகிறது. 2018-ன் கணக்குப்படி, இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.05 சதவிகிதமாக இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது*.
அதாவது, இன்னும் ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த 27 சதவிகித சிறுவர்கள், சிறுமிகள் படித்து, பட்டம் பெற்று, இளைய-முதியவர்களாக (Young adults) வாழ்க்கையின் முதல் படிக்கட்டில் நின்று கொண்டிருப்பார்கள்.
மேலும், சற்று யோசித்துப் பார்த்தால், வரக்கூடிய பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த 27 சதவிகித சிறுவர் சிறுமியர்கள் எப்படிப்பட்டவர்களாக வளரப் போகிறார்கள் என்பது அந்த இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் இந்த நாட்டுக்கே ஒரு முக்கியமான கேள்வி.
ஒரு சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளாமல், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சரியான சிந்தனையில்லாமல், துணிவு, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் போன்ற நல்ல மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ளாமல், படித்து, பட்டம் பெற்ற இளம்-முதியவர்களாக (Young Adults), சரியான வேலையின்றி, தாழ்வு மனப்பான்மையோடு, கட்டுப்பாடில்லாமல் வெறுத்துப் போய் வாழ்க்கையை தறுதலைகளாக ஓட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களா? அப்படி நடந்தால் பல குடும்பங்கள் என்னாகும்? நமது நாட்டின் நிலைமை என்னாகும்?
அதே சமயம், இதே 27 சதவிகித சிறுவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு, நல்ல ஒரு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு திடமான கனவோடு வளரப் போகிறார்களா? அப்படி நடந்தால் எத்தனை குடும்பங்கள் தலை நிமிர்ந்து நிற்கும்? நமது இளைய இந்தியா உலகுக்கே தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்பும் ஏற்படக்கூடும் இல்லையா? இந்த உலகத்தையே நம்மால் வெல்ல முடியாதா?
மாணவர்களே, சிறுவர்களே, இளைஞர்களே! நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறீர்கள்.
வரக்கூடிய பத்து இருபது ஆண்டுகளில் நீங்கள் உங்களை எப்படி கட்டிக் காத்துக்கொள்ளப் போகிறீர்கள், எப்படி உங்களை வளர்த்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று தீர்மானிப்பது இன்று ஒரு முக்கியமான விஷயம்.
இன்று நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.
தொடரும் …
*https://tradingeconomics.com/india/population-ages-0-14-percent-of-total-wb-data.html
“Success is no accident. It is hard work, perseverance, learning, studying, sacrifice and most of all, love of what you are doing or learning to do.” - – Pelé, famous Brazilian footballer (soccer) player.
முன்னமே நான் சொன்னது போல அறிவும் திறமையும் உழைப்பும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கு ஒரு படி மேலாகவும் நமக்கு வேண்டியது நல்ல ஒரு பெர்சனாலிடி.
நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழ்மையான நாடாகக் கருதப்பட்ட நமது நாடு முன்னேறி வளரும் நாடானது. இன்னமும் வளர்ந்த நாடாகவே வகைப்படுத்தப்பட்டாலும் பல வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவு இன்று நமது நாடு முன்னேறியிருக்கிறது. பொருளாதாரத்தில், தொழில் நுட்பத்தில், கல்வியில், திறமையில், வாணிபத்தில் இப்படிப் பல வகைகளிலும் நமது நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு இளைஞர்களுடன் சரி சமமாக போட்டி போட்டு வெற்றி கண்டு வருகிறார்கள். பல பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் பிறந்து வளர்ந்த பல இளைஞர்கள் (YOUTH) நிர்வகித்து வருகிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதனுடைய பொருளாதாரம் மிக முக்கியமான அளவுகோலாக இருக்கிறது. பொருளாதாரம் முன்னேறும் பொழுது பல குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தரக் குடும்பமாகவோ அல்லது பணக்காரக் குடும்பமாகவோ மாறுகிறது.
பொருளாதாரம் முன்னேற நல்ல வேலை வாய்ப்புகள், கை நிறைய சம்பளம் அல்லது வளமான சுயதொழில் முக்கியமானது.
கை நிறைய சம்பளம் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் இன்று வேலைக்கு விண்ணப்பிப்பவர்களிடையே வேலை பார்க்கும் சிறப்புத் திறன்கள் (Employability) குறைவாகவே இருப்பதாகக் கருதுகிறார்கள். வேலை தேடும் இளைஞர்களிடம் இந்த நிறுவனங்கள் எதைப் பெரியதாக எதிர்பார்க்கிறார்கள்?
இல்லை, யாருக்கும் கைகட்டி நிற்கப் போவதில்லையென்று, சுயமாக ஏதேனும் ஒரு தொழில் செய்ய விரும்புகிறீர்களா, அப்படி ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு அடிப்படையாக என்னென்ன தேவை?
அல்லது, ஏதேனும் ஒரு துறையில் பிரபலமானவராக உயர விரும்புகிறீர்களா?
எதை அடைய விரும்புகிறீர்கள்? அதற்கு என்னென்ன தேவைகள் என்று ஆராயும் பொழுது முக்கியமானவையாக வருவது:
இவையெல்லாமே உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பெர்சனாலிடியின் பல வர்ணங்கள்.
அதாவது, நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற அல்லது சுயமாக ஒரு தொழில் செய்து முன்னேற, அல்லது ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்க உங்களுடைய பெர்சனாலிடி ஒரு முக்கியக் காரணமாகிறது.
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களோ அல்லது தர வரிசையோ மட்டும் போதாது. நீங்கள் வெறும் அறிவாளியாகவோ, சிறந்த திறமைசாலியாகவோ கடுமையாக உழைப்பவராகவோ இருந்தால் மட்டும் போதாது.
உங்களுடைய பெர்சனாலிடியை ஒட்டியே உங்கள் வெற்றிகள் அமையும். உங்கள் பெர்சனாலிடியே உங்களை ஒரு ‘சேம்பியனாக’ (Champion) மாற்றும்.
பெர்சனாலிடியைத் தீர்மானிக்கும் விஷயங்கள் என்னென்ன? வரும் பகுதிகளில் அலசலாம்.
… தொடரும்
"Personality is defined as the series of traits that make you unique ..." - Jerry West, American Basketball player
ஆக, நமது வெற்றிக்கு நமது பெர்சனாலிடி ஒரு முக்கியக் காரணம் என்பதைச் சொன்னேன். அது சரி, பெர்சனாலிடியை எது தீர்மானிக்கிறது?
நமது பெர்சனாலிடியை தீர்மானிக்க கூடியவை எவை என்று பார்த்தால் முக்கியமாக வருவது:
இப்படிப் பல. தொடரும் …
"Personality is defined as the series of traits that make you unique ..." - Jerry West, American Basketball player
ஆக, நமது வெற்றிக்கு நமது பெர்சனாலிடி ஒரு முக்கியக் காரணம் என்பதைச் சொன்னேன். அது சரி, பெர்சனாலிடியை எது தீர்மானிக்கிறது?
நமது பெர்சனாலிடியை தீர்மானிக்க கூடியவை எவை என்று பார்த்தால் முக்கியமாக வருவது:
இப்படிப் பல. தொடரும் …